விருதாச்சலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ரத்த கரையுடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 499 நகரங்களில் பிற்பகல் 2 மணியிலிருந்து மதியம் 5:20 மணி வரை நடைபெற்றது.
இத்தேர்வை எழுதுவதற்காக நேற்று காலை 11 மணியிலிருந்து, மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு வர தொடங்கினர். அதன் ஒரு பகுதியாகக் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தேர்வு மையங்களில், ஒன்றான விருதாச்சலம் ஜெயப்பிரியா பள்ளியில் கடைசி நேரத்தில், அவசர அவசரமாகச் சட்டையில் ரத்தக்கரையுடன் மாணவர் ஒருவர், தேம்பி அழுதப்படியே தேர்வு எழுதும் மையத்திற்குப் பரப்பரப்பாக ஓடி வந்தார்.
அவ்வாறு ஓடி வந்த மாணவனை அங்கிருந்த தேர்வு துறை அதிகாரிகள் அசுவாசப்படுத்தி மாணவரை விசாரித்தனர். அப்போது மாணவர் தான் தேர்வு எழுத இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் வந்துக்கொண்டிருந்தேன்.அப்போது விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் வர தாமதமானதாகக் கண் கலங்கியப்படியே கூறினார்.
அதனைக்கேட்ட தேர்வு மைய அதிகாரிகள் பதட்டப்படாமல், உள்ளே செல்லு மாறும், தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் நிமிடங்கள் உள்ளது எனவும் சரியான நேரத்திற்குள் வந்துவிட்டாய் எனக்கூறி அம்மாணவனை மனதைதேற்றி அனுப்பி வைத்தனர்.
தனது தந்தை விபத்தில் சிக்கியதால், அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, நீட் தேர்வு எழுத வேண்டும் எனச் சட்டையில், ரத்த கரையுடன், கடைசி நேரத்தில் வந்த மாணவனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சட்டையில் ரத்தக்கறையுடன் தேர்வு எழுத வந்த மாணவனின் பெயர் கோகுலகிருஷ்ணன் என்பதும், இவர் கடலூர் அருகே உள்ள தோட்டா பட்டு என்ற கிராமத்தில் இருந்து தனது தந்தையான நாட்டான்சரன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது வடலூர்- நெய்வேலி பகுதிக்கு இடையே விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.