கடலூர்: தாய் இறந்த சில மணி நேரத்தில் விபத்தில் சிக்கிய மகன்-சங்கு ஊதுபவரை அழைக்க சென்றபோது நேர்ந்த சோகம்

சங்கு ஊதும் கலைஞரை அழைத்து வரச்சென்ற மகன் சாலை விபத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடலூர்: தாய் இறந்த சில மணி நேரத்தில் விபத்தில் சிக்கிய மகன்-சங்கு ஊதுபவரை அழைக்க சென்றபோது நேர்ந்த சோகம்

விருத்தாசலம் அருகே தாயின் இறப்பிற்கு சங்கு ஊதுபவரை அழைத்து வர சென்ற மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ஞானவேல் ( 46). கட்டட மேஸ்திரி. இவரது தாய் சின்னபொண்ணு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தாயின் இறுதி சடங்கு நிகழ்விற்காக விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் உள்ள சங்கு ஊதும் கலைஞர்களை அழைத்து வர ஞானவேல், தனது உறவினர் பாபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் காலை 6.30 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பூதாமூர் துணை மின்நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ஞானவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாபு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் ஞானவேல் உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் இறுதிச்சடங்கு நிகழ்விற்கு‌ சங்கு ஊதும் கலைஞரை அழைத்து வரச்சென்ற மகன் சாலை விபத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் விருத்தாசலம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com