சி.எஸ்.ஐ திருச்சபையில் அடிதடி: சர்ச் திறக்க பிஷப்பிற்கு எதிர்ப்பு

பிஷப் பர்னபாசு
பிஷப் பர்னபாசு

நெல்லை சி.எஸ்.ஐ திருச்சபையில் பிஷப் பர்னபாசுக்கும், செயலாளர் ஜெயசிங், ஞான திரவியம் எம்.பி கோஷ்டிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு அடிதடி சண்டையில் முடிந்திருக்கிறது. இது தொடர்பாக ஞான திரவியம் எம்.பி, ஜெயசிங் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படு, திருச்சபை தலைமையகம் இழுத்து மூடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் புதிய சர்ச்சை திறக்க பிஷப்பிற்கு மக்கள் தடை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து செயலாளர் ஜெயசிங் தரப்பு கூறுகையில், ’’நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் புராதான தேவாலயம் இருந்தது. இந்த சர்ச் பொதுமக்கள் நன்கொடை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இதற்காக கணிசமான தொகையை வழங்கியவர் செயலாளர் ஜெயசிங். இந்த நிலையில் சர்ச் புதுப்பிக்கும் பணிகள் கடந்த வாரம் முடிவடைந்தது. 29ம் தேதி செயலாளர் ஜெயசிங் முன்னிலையில் பிஷப் பர்னபாஸ் சர்ச்சை திறந்து வைப்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், பிஷப்புக்கும், செயலாளருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால், பிஷப் மட்டும் அங்கு வந்து சர்ச்சை திறந்து வைப்பார் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ’’வந்தால் இரண்டு பேரும் சேர்ந்து வாருங்கள். இல்லா விட்டால் சர்ச் திறப்பு விழாவுக்கு வரவேண்டாம்’’என்று சொல்லி விட்டனர். பின்னர் லோக்கல் சர்ச் கமிட்டியினர் தாங்களாகவே சர்ச்சை திறந்து வைத்து நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனால் பிஷப் தரப்பு கடும் டென்சனில் இருக்கிறது‘’ என்றார்.

-துரைசாமி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com