ஆண் சிறையில் சாரய ஊறல், பெண் சிறையில் எப்.எம் ரேடியோ - சேலம் சிறை சர்ச்சைகள்

'சாராய ஊறல் போட்டது நான் தான்னு வார்டனுங்க சந்தேகப்படுறாங்க'
சேலம் சிறை
சேலம் சிறை

சேலம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ளது சேலம் மத்திய சிறை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிதனியாக சிறை வளாகம் அமைந்துள்ளது. ஆண்கள் சிறையில் 900 கைதிகளுக்கு பக்கமாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மாதந்திர ஆய்வின்போது ஒரு சிறை அறையில், ரெண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் திராட்சை, வெள்ளம், வெள்ள பட்டை போட்டு கலந்து ஊறல் போடப்பட்டு இருந்தது. உடனே சிறைத்துறை எஸ்.பி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு வழக்கில் ஆஜராக வந்த கரூரை சேர்ந்த மாங்கா பிரபு என்ற குற்றவாளி 'சாராய ஊறல் போட்டது நான் தான்னு வார்டனுங்க சந்தேகப்படுறாங்க' என்று சேலம் கோர்ட் வளாகத்தில் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டார். எப்படியோ அவரை சமதானம் செய்து அதிகாரிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.

சிறையிலே சாரயாமா? சிறை காவலர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘கைதிகள் வழியாகவே சாரய ஊறல் தவல் கிடைச்சது. மதிவாணன்ங்கிற ஜெயிலர் தலைமையிலதான் ஆய்வு நடந்து கண்டுபிடிச்சாங்க. ஊறல் மண்ணுகுள்ள போட்டு மூடி வச்சிருந்தாங்க. ஊறலில் சில பழம், வெள்ளம் இருந்தது. போதைக்கு போடுற வெள்ளை வேலை பட்டை கொஞ்சம் இருந்தது. இதெல்லாம் எப்படி ஜெயிலுக்குள்ள வந்ததுன்னு விசாரணை போய்கிட்டு இருக்கு. வழக்கமாவே சிகரெட், கஞ்சா, ஹான்ஸ் பாக்கு சிறைக்குள் புழங்கும். அதிகாரிகளே ரெட்டிப்பு காசு வாங்கிட்டு விப்பாங்க.

சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி விசயம் வெளியில வரும். அடங்கிப் போகும். குவாட்டர் பாட்டில் கூட ஜெயில்ல பிடிப்பட்டிருக்கு. முதன்முதலா இப்பதான் சாரய ஊறல் கண்டுபிடிச்சி இருக்காங்க. மாங்கா பிரபு தங்கியிருக்கிற ரூமுக்கு பக்கத்தில கிடைச்சது. எல்லா கைதிகள் மேலயும் சந்தேகம் இருக்கு. பிரபு மீதும், அவரோட நண்பர்கள் மீதும் சந்தேகம் அதிகமா வருது' என்றார்கள்.

ஆண்கள் சிறை இப்படியிருக்க, சேலம் பெண்கள் சிறையில் சிறைத்துறை மேற்கு மண்டல டி.ஜி.பி வினோத், பெண்கள் சிறையில் ஆய்வு செய்தபோது வார்டன்கள் ஹாயாக பாட்டுக்கேட்டு கொண்டிருந்தனர். இங்க எப்படி எப்.எம் என்று விசாரிக்கும்போது, 'கைதி கிஃப்டாக வாங்கி தந்தார். அதை உள்ள வச்சி போர் அடிக்கமா இருக்க பாட்டு கேட்டுகிட்டு இருக்கோம்' என்று வார்டன் சொல்ல, ஷாக் ஆகிவிட்டார் சிறைதுறை டி.ஜி.பி. பாட்டு கேட்ட வார்டன்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

இதைப்பற்றி விளக்கம் கேட்க சேலம் சிறைத்துறை எஸ்.பி யை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. சாரய ஊறல் கைதிகளுக்கா? இல்லை வார்டன்களுக்கும் சம்மந்தம் இருக்கிறதா? என்று விசாரணை தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com