புதுக்கோட்டை: தனது காரில் வீடு வரை சென்று வழியனுப்பிய கலெக்டர்: ஓய்வு பெற்ற நாளில் நெகிழ்ந்த டபேதார்

புதுக்கோட்டை: தனது காரில் வீடு வரை சென்று வழியனுப்பிய கலெக்டர்:  ஓய்வு பெற்ற நாளில் நெகிழ்ந்த டபேதார்
Vimal Raj

தனது அலுவலக உதவியாளரை தனது காரில் முன்னிருக்கையில் டபேதாரை அமர வைத்து வீட்டிற்கே கொண்டு போய் விட்டு விட்டு வந்திருக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டபேதாராக இருந்தவர் அன்பழகன். இவர் இம்மாவட்டத்தின் முன்னாள் இருந்த ஆட்சியர் உமா மகேஸ்வரி, தற்போதைய ஆட்சியர் கவிதா ராமு ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.

வழியனுப்பும் கலெக்டர் கவிதா ராமு
வழியனுப்பும் கலெக்டர் கவிதா ராமுVimal Raj

இந்நிலையில் டபேதார் அன்பழகன் பணியிலிருந்து இன்று ஓய்வு பெற்றார். அவரை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது காரில், தான் அமர்ந்து செல்லும் இருக்கையில் அன்பழகனை அமர வைத்து அன்பழகனின் வீடான அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் உடன் சென்று வீட்டில் இறக்கி விட்டு அதன் பின்னர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் பங்கேற்றார்.

அந்த விருந்தில் டபேதார் அன்பழகனுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அவரை கவுரவித்தார். மாவட்ட ஆட்சியரின் கணவரும் அன்பழகனை கட்டித் தழுவி வழி அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com