கோவை சிட்டியின் சிங்காநல்லூர் – தீத்திபாளையம் செல்லும் தனியார் பேருந்தில் சென்ற நபர் ஒருவரை பேருந்து உள்ளேயே வைத்து கொலை செய்துள்ளது ஒரு 2 பேர் கொண்ட கும்பல். இந்த சம்பவத்தால் க்ரைம் ரேட் கூடிப்போய், கோவை உஷ்ணத்தில் தகிக்கிறது.
கோயமுத்தூர் சிட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பொது இடத்தில் 2 கொலைகளும், ஒரு குரூர கொலை முயற்சியும் நடந்தன. இதில் கிரிமினல்கள் இருவர் இறந்தனர்.
இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீஸ் அவர்களை ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துக்கையில் போலீஸையே சுட்டுக் கொல்ல பாய்ந்தனர் கிரிமினல்கள். போலீஸ் திருப்பிச் சுட்டதில் 2 குற்றவாளிகளுக்கு காலில் குண்டு பாய்ந்தது.
இந்த சம்பவங்களுக்குப் பின் கோவை முழுவதும் குற்றவாளிகள், ரெளடிகளை விரட்டி விரட்டி வேட்டையாடியது போலீஸ். இதனால் பலர் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு தப்பி ஓடினர். ஆனாலும் விரட்டி கைது செய்து வருகிறது போலீஸ்.
காக்கியின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலமாக சிட்டியில் க்ரைம் ரேட் குறைந்திருந்த நிலையில், இப்போது திடீரென ஒரு கொலை முயற்சி அதுவும் பொது வெளியில் நடந்து அதிர வைத்துள்ளது.
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் சில நாட்களுக்கு முன் புலியகுளத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது அவருக்கும், உடையம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ், அருண் என்பவர்களுக்கும் இடையில் சண்டை உருவானது.
இந்த நிலையில், கோவை சிட்டியின் சிங்காநல்லூர் – தீத்திபாளையம் செல்லும் தனியார் பேருந்தில் இராமநாதபுரம் எனுமிடத்தில் கமலேஷ் சென்று கொண்டு இருந்தார்.
அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த சந்தோஷ், அருண் மேலும் ஒருவரும் அந்த பேருந்தில் ஏறினர். கமலேஷிடம் பிரச்னை செய்த அவர்கள் பேருந்தின் உள்ளேயே அவரை சரமாரியாக வெட்டியினர்.
இந்த திடீர் பயங்கரத்தை பார்த்து பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். வெட்டியவர்கள் இறங்கி ஓடிவிட, கடும் காயமடைந்த கமலேஷை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தின் மூலமாக மீண்டும் கோவை சிட்டிக்குள் க்ரைம் ரேட் அடர்த்தி எகிறியுள்ளது.
இந்த நிலையில், சிட்டி போலீஸ் கமிஷனரான பாலகிருஷ்ணன் அனைத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கும் ஸ்பெஷல் உத்தரவுகளை போட்டு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
- கோவை ஷக்தி