சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விவகாரம் - இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலைப்பட்டம் படித்த எங்களை பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது என்று பதவியிறக்கம் செய்யப்பட்டவர்களின் தரப்பில் வாதிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விவகாரம் - இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக சிறப்பு அதிகாரிகளை ஆய்வக உதவியாளர்களாக பதவியிறக்கம் செய்த பல்கலைகழக உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நிர்வாக பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழகத்தை அரசே டெஉத்து நடத்தியது. பின்னர் இந்த கல்வி மையங்களின் எண்ணிக்கை 202 லிருந்து 59 ஆக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலரை உதவி பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதில் அவர்களை வேளாண் துறைக்கும், கல்லூரி கல்வி துறைக்கும் அயல் பணியாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதேபோல 350 சிறப்பு அதிகாரிகளை, அரசு கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமித்ததுடன், ஊதியத்தையும் குறைத்துள்ளதாக கூறி, கிருஷ்ணமூர்த்தி உள்பட 115 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், தங்களை ஆய்வக உதவியாளர்களாக நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அதில் முதுகலைப்பட்டம் படித்த எங்களை பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது என்று பதவியிறக்கம் செய்யப்பட்டவர்களின் தரப்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது என்றும் வாதிடப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்ததான வழக்குக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com