புதுச்சேரி: உச்சம் தொட்ட மதுபோதை- காரை தாறுமாறாக ஓட்டிய சென்னை போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி

காரை துரத்தி சென்ற பொதுமக்கள் மடக்கி பிடித்து ஓட்டுனர் மற்றும் உடன் இருந்த நான்கு பேரை சரமாரியாக தாக்கினர்.
சென்னை போதை ஆசாமி
சென்னை போதை ஆசாமி

புதுச்சேரியில் போதையில் கார் ஓட்டிச்சென்று பொதுமக்களை இடித்துத் தள்ளி விட்டு இருசக்கர வாகனத்தை 5 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற சென்னை ஆசாமிகளை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.

தமிழக பதிவு எண் கொண்ட கருப்பு நிற காரில் மது போதையில் இருந்த வாலிபர்கள் புதுச்சேரி நேரு வீதி ஒரு வழி பாதையில் சென்று பொதுமக்களை இடித்து தள்ளிவிட்டு சென்றனர். பின்னர், முத்தியால்பேட்டை வழியாக சென்ற போது மணி கூண்டு அருகே ஒருவரை இடித்து விட்டு அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தப்பிக்க முயற்ச்சித்தனர். வழி தெரியாமல் லாஸ்பேட்டை விமான நிலையம் பின் புறம் உள்ள நரிக்குறவர் காலனி அருகே சென்றுள்ளனர்.

அப்போது அந்த காரை துரத்தி சென்ற பொதுமக்கள் மடக்கி பிடித்து ஓட்டுனர் மற்றும் உடன் இருந்த நான்கு பேரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வந்த கார் பஞ்சர் ஆன நிலையில் 7 கிலோ மீட்டர் தூரம் வரையில் காரை ஒட்டி சென்றுள்ளனர். பொதுமக்களிடம் சிக்கிய ஆசாமிகளின் உடைகளை களைந்து தர்ம அடி கொடுத்ததால் மயங்கியுள்ளனர்.

போலிசார் விசாரணையில் வாகனத்தை ஓட்டியது, சென்னை, மேடவாக்கம் சுனில், எபினேசர், திலீப், ஆஷிக், ஸ்ரீநாத் ஆகியோர் என்பது தெரியவந்தது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com