தமிழ்நாடு
சென்னை மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் - புதிய கலெக்டர் யார் தெரியுமா?
சென்னை மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய கலெக்டராக அருணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவ்வப்போது நிர்வாக வசதிக்கு மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்தவகையில் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.