சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று சென்னை சென்ரல் இருந்து சூலூர்பேட்டைக்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டு இருந்துது.
அந்த ரயில் விம்கோ நகர் நிறுத்தத்தில் நின்றபோது, பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே முதலில் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், அது மோதலாக மாறியது. இதில், இரு தர்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
அப்போது, மாணவர்கள் கொண்டு வந்த பட்டாக் கத்தி மற்றும் கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரை !ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த கோஷ்டி மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகளும் அடைத்து உடைக்கப்பட்டது. இதனால், ரயிலில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து அருகில் உள்ள பெட்டிக்கு ஓடினார்கள்.
அப்போது, மாணவர்கள் சிலர் பொது மக்கள் மீதும் கற்கள் வீசினர். இதில், ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அச்சமூட்டும் வகையில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக ரயிலில் பயணம் செய்பவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.