கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதை வலியுறுத்தியும், நீச்சலின் முக்கியத்துவத்தை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை கோவளம் ப்ளூ பீச் கடற்கரையில், நீச்சலுடன் கூடிய ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிகளில் சிறுவர் சிறுமியர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இப்போட்டிகள் வயதின் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் சிறுவர் சிறுமியர் பிரிவில் நடைபெற்ற 750 மீட்டர் நீச்சல் போட்டியில், ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ரீநித்தி கலந்துக் கொண்டு முதல் பரிசு வென்று அசத்தியுள்ளார்.
நீச்சலுடன் கூடிய ஓட்டப்பந்தய போட்டி தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.