தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும். மற்றபடி வெப்பசலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மழை கிடைக்கும்.

அதன் தொடர்ச்சியாக இன்றும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com