தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகில் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாடு விளக்க அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது "அதிமுக ஆட்சியில் தொடங்கி வைத்த திட்டங்களுக்கு மூடுவிழா போடுவதில் தான் திமுக ஆட்சி தீவிரமாக இருக்கிறது. இதெல்லாம் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரத்தில் மக்கள் திமுகவுக்கு மூடுவிழா போடுவார்கள்.
சனாதனத்தை பற்றியும் சனாதனத்தை ஒழிக்க போவதாகவும் திமுக பேசுகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலினிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? ஸ்டாலின் குடும்பத்தில் முதலில் சனாதனத்தை ஒழிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.