விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலவனூரில் சுடுகாட்டு பகுதியிலுள்ள ஏரி வாய்க்காலில், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டியபோது இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டுடியுள்ளனர். அப்போது கை ஒன்று வெளியே தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசாரின் மேற்பார்வையில் பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, 25 வயது மதிக்க தக்க இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பெண் சடலம் யாருடையது என விசாரணையில் இறங்கியுள்ளனர். சாலவனூர் பகுதியில் இளம்பெண் மாயமானதாக புகார் வரவில்லை என்பதால், மர்ம நபர்கள் இளம் பெண்ணை கொலை செய்து அப்பகுதியில் புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.