தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை திடீர் கடிதம் - என்ன காரணம்?
‘மது இல்லாத தமிழகம்’ என்ற பா.ஜ.க-வின் திட்ட அறிக்கையை ஐவர் குழு சந்தித்து வழங்க நேரம் ஒதுக்கி தருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘மது இல்லாத தமிழகம்’ என்பது பா.ஜ.க-வின் கனவு மட்டுமல்ல. தமிழக மக்களின் விருப்பமும்கூட. அதை நிறைவேற்றிட பா.ஜ.க தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். இதுதொடர்பாக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் ஐவர் குழுவானது தங்களை சந்தித்து பா.ஜ.க திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
ஆகவே வருகிற ஜுலை 11ம் தேதி முதல் 13ம் தேதி அல்லது இந்த மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும்’ என கூறியுள்ளார்.