தோஷம் கழிப்பதாக நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் - சேலத்தில் பகீர் சம்பவம்

கையில் வைத்திருந்த குச்சியை தம்பதிகள் தலையில் வைத்து மந்திரம் சொல்லி அடிக்க, சிறிது நேரம் தம்பதிகள் சுய நினைவின்றி இல்லமால் இருந்திருக்கின்றனர்.
நகைகளை பறிகொடுத்த முதியவர்கள்
நகைகளை பறிகொடுத்த முதியவர்கள்

சேலத்தில் தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பலை போலீசார் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம்,ஜலகண்டாபுரம் அருகே உள்ள காப்பாரத்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி- செல்லம்மாள் தம்பதி. வயதான இந்த தம்பதிக்கு செல்வராஜ் என்ற 33 வயதான மகன் உள்ளார்.செல்வராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தம்பதிகள் வீட்டில் இருக்கும்போது மஞ்சள் வேஷ்டி, குறி சொல்லும் பை வைத்துகொண்டு ஒரு இளைஞர் பக்தியோடு வந்திருக்கார். அவரிடம் பையன் ஜாதகத்தை கொடுத்து திருமணம் ஆகுமா? என்று கேட்டுருக்கிறார்கள். பையனுக்கு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்யனும் செஞ்சத்தான் திருமணம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

பரிக்கார கட்டணமாக 2000 பேசி பூஜையை ஆரமபித்திருக்கிறார் ஜோசிய இளைஞர். பூஜையில் தம்பதிகளை உட்கார சொல்லிவிட்டு வீட்டிலிருந்த நகைகளை கொண்டு வர சொல்லியிருக்கிறார். 2 பவுனும், 2000 பணமும் கொண்டு வந்து பூஜையில் வைத்திருக்கிறார்கள். ஜோசிய இளைஞர் கையில் வைத்திருந்த குச்சியை தம்பதிகள் தலையில வைத்து மந்திரம் சொல்லி அடிக்க, சிறிது நேரம் தம்பதிகள் சுய நினைவின்றி இல்லமால் இருந்திருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளார் இளைஞர்.

மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்து தம்பதிகள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி இருக்கின்றனர்.அருகாமையில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் சொல்ல போலீஸ் வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளை ஏமாற்றிவிட்டு அதே கிராமத்தில் காட்டு கொட்டகையில் உள்ள அய்யம்மாள் என்பவரது வீட்டுக்கும் சென்ற நேரம் சரியில்லை,பரிகாரம் செய்யனும் என்று கூற, அவரும் 5000 கொண்டு வந்து பூஜையில் வைத்திருக்கிறார். அதையும் மேற்கண்ட டெக்னிக்கை பயன்படுத்தி ஜுட் விட்டு, பணத்தை ஆட்டையை போட்டு தப்பி இருக்கிறார். இது குறித்தும் அய்யம்மாள் போலீசில் புகார் செய்ய போலீஸார் ஜோசியகார மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஜலகண்டாபுரம் போலீசார் இதுபற்றிக் கூறும்போது, ' டூ விலரில் வந்து.மூதாட்டிகளை ஏமாற்றி போன அந்த நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகிறோம். மேட்டூர், தாரமங்கலம் பகுதிகளில் இந்த மாதிரி நடந்திருப்பதாக செய்தி வருகிறது.இந்த ஜோசியகார திருட்டு கும்பலின் டெக்னிக் வயது முதிர்ந்த தம்பதியர்தான். நிஜமான ஜோதிடர்கள் இந்த வேலையை செய்கிறார்களா? திருடர்கள் ஜோதிடர்கள் போல வந்து செய்கிறார்களா என்று விசாரணை செய்து வருகிறோம். வயதான முதியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது. வீட்டில் வயசு பசங்க இருக்கும்போதுதான் இந்த மாதிரி நபர்களிடம் பேச்சே கொடுக்க வேண்டும்' என்கின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com