தனியார் பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நடத்துநர்
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நடத்துநர்

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் என்ற இடத்தில் தனியார் பேருந்து நடத்துநரை இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பயணி சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் இருந்த தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பந்தபட்ட பேருந்து சுந்தரபெருமாள் கோயில் என்ற இடத்தில் வழிமறித்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், காயமடைந்த வலங்கைமானை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் ராஜலிங்கம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பாக சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com