'வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு' - முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்துக்கு அதிகமாக ₹45.20 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
K.P.Anbalagan
K.P.Anbalagan

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக ₹45.20 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், இவரது மனைவி வைஷ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், கே.பி.அன்பழகன் மீதான வழக்கில் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை இன்று தாக்கல் செய்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும். 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com