நடிகை விஜயலட்சுமி 2011ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கொடுத்திருந்தார். அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
காவல் துணை ஆணையர் உமையாள் நடத்திய விசாரணையின் போது விஜயலட்சுமியிடம் பல முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்
இதை தொடர்ந்து இன்று காலை செங்கல்பட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளிக்க அழைத்து வரப்பட்டார் நடிகை விஜயலட்சுமி.
மேலும் நடிகை விஜயலட்சுமியை நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெற்று கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ள நடிகை விஜியலட்சுமியிடம் நீதிபதி முன்னிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடைப்பெற்றது.