தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா தமிழில் ரஜினி நடிப்பில் ஊர்க்காவலன், ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோ பாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மனோ பாலாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.