காஞ்சிபுரத்தில் இரத்த தான முகாம்: 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இரத்த தானம்

காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாமில் கல்லூரி மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்.
மாணவர்கள் இரத்த தானம்
மாணவர்கள் இரத்த தானம்

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி கலையரங்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் தலைவர் சீனிவாசன் தலைமையில், கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இரத்த தானம் செய்யும் மாணவர்கள்
இரத்த தானம் செய்யும் மாணவர்கள்

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் கொடுத்தனர். இரத்த தானம் செய்த கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கபட்டது. முன்னதாக ரத்த தானம் செய்ய வந்த கல்லூரி மாணவர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்த வகை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இம்முகாம் மூலம் பெறப்பட்ட இரத்த தானங்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ இரத்த தான கிடங்கில் சேமிக்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்
இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் பாக்யராஜ் , கிளப் பயிற்சியாளர் பூபதி, சமூக சுகாதார சேவைகள் தலைவர் சதீஷ் குமார், கிளப் ரத்ததான தலைவர் சையத் அகமத், மாவட்ட ரத்ததான மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com