காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இங்குத் தங்கம் , வெள்ளி உள்ளிட்ட ஆபரண நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் கடையில் நுழைந்து நகை வாங்குவது போல் பல்வேறு நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உரிமையாளரைத் திசை திருப்பிவிட்டு 48 கிராம் எடையுள்ள இரண்டு தங்க செயினை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நகைக் கடை உரிமையாளர் உடனடியாக இளம்பெண்ணை துரத்திச் சென்றுள்ளார். அதற்குள் இளம் பெண் மயமாகியுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் ஆய்வு செய்த பொது இளம்பெண் ஒருவர் நகையைத் திருடிக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்துத் தப்பிச் சென்ற இளம் பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் திருடிச் சென்ற நகையின் மதிப்பு சுமார் 2.5 லட்சம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.