ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் என்று ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறதியில் முக்கிய வாக்குறுதியாக கருதி அதனை அறிவித்தது. ஆட்சி பொறுப்பிற்கு வந்து 2 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இப்போது வரை அந்த மகளிர் உரிமை தொகை கொடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளின் போது இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பின்னர், அதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் டோக்கன் முறையில் தகுதியான குடும்ப பெண்களின் தகவல்களை பெற்றுகொண்டு அதனை பதிவேற்றம் செய்தனர்.
அதனை தொடர்ந்து குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கான ஏடிஎம் கார்டு தயாராகி வருகிறது. அந்த ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகளம் மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வேலை நிராகரிக்கப்பட்ட பட்டியலில் எவர் பெயரேனும் இருக்குமானால் அவர்கள் பகுதி ஆர்டிஓ-யிடம் சென்று முறையிட்டு தீர்வினை பெற்று கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 15ம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின். அவர் தொடங்கி வைத்ததும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் பின் மாதம் 1ம் தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வந்துவிடும் என்று தகவல்கள் வந்துள்ளன.