யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசைக்கார ஆசாமி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சாலையில் போதையில் மீசைக்கார ஆசாமி ஒருவர் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த காட்டு யானைக்கு வணக்கம் தெரிவித்தும், இரண்டு கைகளை தூக்கியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து யானையை அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களை தாக்கும். ஒகேனக்கல் சாலையோரம் இருந்த யானை போதை ஆசாமியை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.
-பொய்கை.கோ.கிருஷ்ணா