தேனியிலிருந்து கேரளாவுக்கு காரில் செல்லும்போது சாலையில் நின்று கொண்டிருந்த யானை மீது கார் மோதியது. இதனால், ஆத்திரமடைந்த யானை காருக்குள் இருந்தவர்களைத் தாக்கியதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், கேரளா எல்லைப் பகுதியான போடி மெட்டிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோண்டி மலை. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் தோண்டி மலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்தல் என்னும் பகுதியில் மத போதகராக பணியாற்றி வரும் தங்கராஜ் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் காரில் பூப்பாறையில் இருந்து தனது சொந்த ஊரான சிந்தலுக்கு காரில் வந்துள்ளார்.
தங்கராஜின் மகன் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது தோண்டி மலை அருகே உள்ள வளைவில் யானை ஒன்று மேலே உள்ள ஏலத் தோட்டத்திலிருந்து இறங்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது. வளைவான மலைப்பாதை என்பதால் போதிய இருள் சூழ்ந்து வெளிச்சமின்மை காரணமாக திடீரென்று சாலையின் குறுக்கே யானையைக் கண்டதும் காரை ஒட்டி சென்ற தங்கராஜ் மகன் பதற்றத்தில் யானையின் மீது காரை மோதியுள்ளார். இதனால், பதட்டம் அடைந்த யானை காரில் இருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியது.
காரின் உள்ளே அமர்ந்திருந்த தங்கராஜின் தலையிலும், காலிலும், மார்பிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் காரை உடனடியாக பின்னோக்கி ஓட்டிச் சென்று வெகு தூரம் சென்றனர். இதனை எடுத்து யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. காயம் அடைந்த தங்கராஜ் உடனடியாக போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சாலையில் நின்று கொண்டிருந்த யானை மீது கார் மோதியது. இதனால், ஆத்திரமடைந்த யானை காருக்குள் இருந்தவர்களைத் தாக்கியதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், கேரளா எல்லைப் பகுதியான போடி மெட்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோண்டி மலை. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் தோண்டி மலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுந்தல் என்னும் பகுதியில் மத போதகராக பணியாற்றி வரும் தங்கராஜ் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் காரில் பூப்பாறையில் இருந்து தனது சொந்த ஊரான சுந்தலுக்கு காரில் வந்துள்ளார்.
தங்கராஜின் மகன் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது தோண்டி மலை அருகே உள்ள வளைவில் யானை ஒன்று மேலே உள்ள ஏலத் தோட்டத்தில் இருந்து இறங்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது. வளைவான மலைப்பாதை என்பதால் போதிய இருள் சூழ்ந்து வெளிச்சமின்மை காரணமாக திடீரென்று சாலையின் குறுக்கே யானையைக் கண்டதும் காரை ஒட்டி சென்ற தங்கராஜ் மகன் பதற்றத்தில் யானையின் மீது காரை மோதியுள்ளார். இதனால், பதட்டம் அடைந்த யானை காரில் இருந்தவர்களை தாக்கத் தொடங்கியது.
காரின் உள்ளே அமர்ந்திருந்த தங்கராஜின் தலையிலும், காலிலும், மார்பிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் காரை உடனடியாக பின்னோக்கி ஓட்டிச் சென்று வெகு தூரம் சென்றனர். இதனை எடுத்து யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது. காயம் அடைந்த தங்கராஜ் உடனடியாக போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.