தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை… வானிலை ஆய்வு மையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. லட்சத் தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 15 சென்டி மீட்டரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 சென்டி மீட்டரும், நீலகிரி மாவட்டம் குந்தா அணைக்கட்டில் 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.