பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியது… 3 பேர் பலி..

பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியது… 3 பேர் பலி..

பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறியது… 3 பேர் பலி..

சென்னையில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிந்தனர்.  

வாகனத்தில் புகை வந்ததைக் கண்ட ஓட்டுனர் உள்பட 3 பேரும் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த பட்டாசு பண்டல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் சாலையோரக் கடைகளில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தீக்காயம் அடைந்த 9 பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, புதுவை முருங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுனர் வீராசாமியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com