திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலையம்மாள். இவரது கணவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலையம்மாள். இவரது கணவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு 1 ஆண் குழந்தை மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 14ம் தேதி சோலையம்மாளுக்கு மற்றொரு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து 16ம் தேதி மருத்துவமனையில் இருந்து குழந்தையுடம் சோலையம்மாள் மாயமானார். அதனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சோலையம்மாளையும் அந்த குழந்தையையும் போலீஸார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு தனது தங்கையிடம் சோலையம்மாள் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தனது குழந்தை இறந்து விட்டதாகவும்,அதனை சென்னையில் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சோலையம்மாளுக்கு சமாதானம் கூறிய அவரது தங்கை சேவூரில் நிலவி வரும் பிரச்சனைகளை கூறி திரும்பி வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி சோலையம்மாள் கடந்த 28ம் தேதி சோவூர் திரும்பினார். அதனை தொடர்ந்து இவரிடன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பயங்கரமான உண்மை வெளியே வந்தது. அதில், சோலையம்மா அவரது கணவரின் அண்ணன் பாபுவுடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
மேலும் பாபுவால் கருவுற்ற சோலையம்மாள் பிறந்த குழந்தை பாபுவின் சாயலில் இருந்ததால் அந்த குழந்தையை கொல்ல இருவரும் சேர்ந்து முடிவெடுத்து சேவூர் வயல்வெளியில் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.