லட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர்கள் மீது கிரிமினல் வழக்கு … வங்கியின் பங்குகள் கடும் சரிவு!

வாடிக்கையாளர் ஒருவர், தனது நிதியை நிலையான வைப்புத்தொகையாக (Fixed Deposit) ரூ.790 கோடி வைத்திருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குனர்கள் ரூ.790 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இந்திய நிதிச் சேவை நிறுவனமான ரிலிகேர் ஃபின்வெஸ்ட் (ஆர்.எஃப்.எல்)  குற்றஞ்சாட்டியது. இந்த புகாரின் அடிப்படையில், டெல்லி  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மும்பை பங்குச் சந்தையில், லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்தன. இதனால், முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டு வசதி நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்- உடன், லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வந்துள்ளது. ஆனால், இதற்கு உடனடியாக இந்தியா புல்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த கிரிமினல் வழக்கை சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள உள்ளதாக லட்சுமி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com