நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்ஃபான் என்ற மாணவரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் இர்ஃபான் என்ற மாணவரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மருத்துவப்படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்டில் உதித் சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பை தேனியில் உள்ள மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார்.
இதனையடுத்து அவர் மீது புகார் எழுந்த நிலையில் அவரையும் அவரது தந்தையையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரின் தந்தையை போலீஸார் நேற்று கைது செய்தனர். அத்துடன் இர்ஃபானையும் சேலத்தில் உள்ள தீவட்டிப்பகுதியில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இர்ஃபான் மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.