தமிழ்நாடு
ஜீவசமாதி பெயரில் உண்டியல் வசூல்.. சாமியார் மீது வழக்கு..
ஜீவசமாதி பெயரில் உண்டியல் வசூல்.. சாமியார் மீது வழக்கு..
இருளப்பசாமி உட்பட 7 மீது சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பாசாங்கரையைச் சேர்ந்த இருளப்பசாமி என்பவர், தான் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார். இதனைக் கேள்விப்பட்டு, கடந்த 13ஆம் தேதி இரவு முதல் பாசாங்கரையில் மக்கள் குவிந்தனர்.
அந்தப் பகுதியில் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட குழியும் தோண்டப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் அங்கு வந்தார். அப்போது, நேரம் முடிந்து விட்டது, இன்னொரு நாளில் ஜீவசமாதி அடைவேன் என்று இருளப்பசாமி அறிவித்தார். மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந் நிலையில், ஜீவசமாதி அடையப்போவதாகக் கூறி மக்களை ஏமாற்றி உண்டியல் மூலம் பணம் வசூலித்து மோசடி பண்ணியதாக, இருளப்பசாமி உட்பட 7 மீது சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.