அரசு மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிப்பறையில் வழக்கம் போல ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கு பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த குழந்தை உடனடியாக கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டது.மேலும் இந்த குழந்தையை ஆய்வு செய்த மருத்துவர்கள் இந்த குழந்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரிவித்தனர்.
இதனால் இந்த குழந்தையை யார் இங்கு கொண்டு வந்திருப்பார் என கண்டறிய சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து, விசாரனை மேற்கொண்டு வருவதாக வாணியம்பாடி தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.