நேர்மைக்கு கிடைத்த பரிசு... பாடப் புத்தகத்தில் ஈரோடு சிறுவன்!

நேர்மைக்கு கிடைத்த பரிசு... பாடப் புத்தகத்தில் ஈரோடு சிறுவன்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா- அப்ரூத்பேகம் தம்பதியரின் மகன் முகமது யாசின்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா- அப்ரூத்பேகம் தம்பதியரின் மகன் முகமது யாசின். இவர் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையில் பணக்கட்டு இருந்ததை கண்டுள்ளார். அதனை உடனடியாக தனது பள்ளி ஆசிரியையுடம் ஒப்படைத்துள்ளார். அதில் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. பின்னர் ஈரோடு எஸ்.பி.,யிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. 

பிறருக்கு சொந்தமான பணத்தை வைத்துக் கொள்ள விரும்பாத யாசினின் நேர்மையை பலரும் பாராட்டினர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அந்த சிறுவனை தனது இல்லத்திற்கு வரவழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 2ம் வகுப்பு புத்தகத்தில் முகமது யாசின் பற்றிய செய்தி புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. ஆத்திச்சூடி நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ், பணத்தை ஒப்படைத்த யாசினை ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன் பாராட்டிய புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மாணவனின் நேர்மையை பாராட்டி புத்தகத்தில் மாணவனின் படம் இடம்பெற்றுள்ளதற்கு பலரும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com