தமிழ்நாடு
2 ஆண்டுகளில் தமிழ் படிச்சிருனும்… மின் ஊழியர்கள் ஷாக்!
2 ஆண்டுகளில் தமிழ் படிச்சிருனும்… மின் ஊழியர்கள் ஷாக்!
அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பணியை இழக்க நேரிடும். இதுதான் சட்ட விதிமுறை என்றார்.
தமிழக மின்வாரியத்தில் பணி அமர்த்தப்பட்ட வெளிமாநிலத்தவர்கள், 2 ஆண்டுகளில் தமிழ் கற்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,
உச்சநீதி மன்ற உத்தரவின் பேரிதான், தமிழக மின்வாரியத்தில் பிற மாநிலத்தைச் சேர்ந்த 36 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 2 ஆண்டுகளுக்குள் தமிழ் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பணியை இழக்க நேரிடும். இதுதான் சட்ட விதிமுறை என்றார்.