தமிழ்நாடு
முந்திரி தோப்பில் ஆபாச நடனம்… 15 பேர் கைது… 8 பெண்கள் தப்பி ஓட்டம்…
முந்திரி தோப்பில் ஆபாச நடனம்… 15 பேர் கைது… 8 பெண்கள் தப்பி ஓட்டம்…
போலீசார் உடனடியாக அப் பகுதிக்கு வந்தனர். போலீசைக் கண்டதும், 8 பெண்களும் தப்பி ஓடி விட்டனர்.
விழுப்புரம் ஆரோவில் அருகே உள்ள முந்திரி தோப்பில், புதுச்சேரிக்கு வரும் மதுப் பிரியர்கள் மது அருந்தி மகிழ்வது வழக்கம்,
இந் நிலையில், சென்னையில் இருந்து வந்த 15 இளைஞர்கள் மற்றும் 8 இளம்பெண்கள், முந்திரி தோப்பு பகுதியில் மது அருந்தியதுடன், உற்சாகத்தில் நடனம் ஆட ஆரம்பித்தனர். போதை உச்சத்துக்கு சென்ற நிலையில், கூச்சலிட்டுக்கொண்டு ஆபாச நடனம் ஆடத் தொடங்கினார்கள்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக அப் பகுதிக்கு வந்தனர். போலீசைக் கண்டதும், 8 பெண்களும் தப்பி ஓடி விட்டனர். போதையில் இருந்த 15 இளைஞர்கள் பிடிபட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.