தமிழ்நாடு
மாமல்லபுரம்: ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து - 6 பேருக்கு நேர்ந்த சோகம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து இன்று வந்து கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மனமை அருகே அரசு பேருந்து வந்தபோது
எதிர்பாராதவிதமாக எதிர்திசையில் பயணிகளுடன் வந்த ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 குழந்தைகள், 3 பெண்கள், ஓட்டுனர் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.