நாமக்கல்: ஜூஸ் என நினைத்து பெயிண்டைக் குடித்த குழந்தை - கதறும் பெற்றோர்
நாமக்கல் மாவட்டத்தில் ‘ஜூஸ்’ என நினைத்து பெயிண்டைக் குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிப்பாளையம் அலமேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு மவுலீஸ்வரி, தேஜாஸ்ரீ என, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கோவிந்தராஜ் தனது சைக்கிளில் பெயிண்ட் பாட்டிலை கட்டி வீட்டின் வெளியில் நிறுத்தி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளும் கூல்டிரிங்ஸ் என நினைத்து, பெயிண்ட் பாட்டிலை திறந்து மாற்றி மாற்றி குடித்துவிட்டனர்.
பெயிண்டை குடித்த உடனே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. குழந்தைகள் இருவரும் மயக்கம் போட்டு விழுவதைக் கண்டு கோமதி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மவுலீஸ்வரி, தேஜாஸ்ரீ ஆகியோரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் நேற்று தேஜாஸ்ரீ இறந்துவிட்டார். மற்றொரு சிறுமியை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறர்கள். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.