'பிளஸ் 2 தேர்வு முடிவு தேதியில் மாற்றம் ஏன்?' - அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லும் காரணம்

'பிளஸ் 2 தேர்வு முடிவு தேதியில் மாற்றம் ஏன்?' - அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லும் காரணம்

'பிளஸ் 2 தேர்வு முடிவு தேதியில் மாற்றம் ஏன்?' - அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லும் காரணம்

நீட் தேர்வு முடிந்த பிறகு 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிப்படும்

'12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 5ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் நீட் தேர்வு முடிந்த பிறகு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிப்படும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு தேர்வை எழுத, 7 ஆயிரத்து 600 பள்ளிகளில் 8.8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 

குறிப்பாக, தலைநகர் சென்னையில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து, 45 ஆயிரத்து 982 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, தமிழ் மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்களும், ஆங்கிலப் பாடத் தேர்வை 45 ஆயிரம் பேரும் எழுதவில்லை.  இதேபோல, இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத்தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''மாணவர்கள் தேர்வுக்கு ஏன் வரவில்லை? என அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், வேலைக்காக இடம் பெயர்தல், தேர்வு பயம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தேர்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடப்படும். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி புதிய தேதி அறிவிக்கப்படும்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com