முதல்வரையே ஏமாற்றிய மாற்றுத்திறனாளி: கண்டுபிடித்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி

முதல்வரையே ஏமாற்றிய மாற்றுத்திறனாளி: கண்டுபிடித்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
முதல்வரையே ஏமாற்றிய மாற்றுத்திறனாளி: கண்டுபிடித்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி

’பாகிஸ்தானில் அது போன்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறவில்லை'

மும்பை ஸ்போர்ட்ஸ் கடையில் வாங்கிய உலக கோப்பையை,  லண்டனில் நடைபெற்ற வீல் சேர் கிரிக்கெட்டில், தான் பாகிஸ்தானுக்காக விளையாடியதில்  இந்திய அணிக்கு கிடைத்த கோப்பை என்று காட்டி மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்வரையே ஏமாற்றியிருக்கிறார். 

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே அமைந்துள்ளது கீழசெல்வனூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் வினோத்பாபு சுதா தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் . வேலை வாய்ப்பு இல்லாமல் அந்த ஊரில் குடும்பம் நடத்தக்கூட வழியில்லாமல் வினோத் பாபு கஷ்டப்பட்டு வந்துள்ளார்.  2018 ஆம் ஆண்டு வீல்சேர் கிரிக்கெட் பயிற்சிக்காக இராமநாதபுரம் பாராஸ்போர்ட்ஸ் சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். அங்கே சில பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்த்திருப்பதாக கூறி அப்போதைய அமைச்சர் மணிகண்டனிடம் கோப்பையைக் காட்டி கல்லாக்கட்டியிருக்கிறார்.  2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  ஆசியக் கோப்பை வென்றதாகக் கூறி முதல்வரையே சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். அந்த செய்தி வைரலாக வில்லை. 

அதற்கடுத்து கடந்த மார்ச் மாதம்  லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை  வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவிற்கு வெற்றி பெற்று தந்தாகவும், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதாகவும் கூறி அமைச்சர் ராஜக்கண்ணப்பனை சந்தித்துள்ளார். அவரும் பாராட்டி ஒரு லட்சம் ரூபாய் வழங்கியதோடு, முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். முதலமைச்சருடன் மாற்றுத்திறனாளி வினோத் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்த நிலையில் வினோத்பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் என்பதும், உலகக் கோப்பையை வென்று வந்ததாகச் சொல்வதெல்லாம் பொய் எனவும் சென்னை தலைமைச் செயலகத்துக்குப் புகார் சென்றிருக்கிறது. 

இதையடுத்து, உளவுத்துறை மூலம் வினோத்பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. வினோத் பாபு முதலமைச்சரை சந்தித்துச் சென்ற மறுநாள் இந்த தகவல் அறிந்த உளவுத்துறை,  சர்வதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் விசாரித்திருக்கிறது. அதில் ’பாகிஸ்தானில் அது போன்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறவில்லை' என தெரிய வந்திருக்கிறது. 

பின்னர் வினோத்பாபுவிடம் நேரடியாக விசாரித்ததில், அவர் அளித்த பதில் முரணாக இருந்திருக்கிறது. அவர் இந்தியாவில் மேற்கு வங்காளம், ஜான்பூரில் நடந்த உள்ளூர் கிளப்பில் வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியிருக்கிறார். அங்கே இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவதுபோல் அதை வீடியோ எடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் பாகிஸ்தானில் விளையாடியதாக நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார். தன்னுடைய அணி என அவர் அளித்த இந்திய அணியினரின் பெயர் பட்டியல் கூட போலியானது என தெரியவந்துள்ளது. 

மேலும் அவர் கொண்டுவந்த உலகக்கோப்பை, மேற்கு வங்காளத்திலுள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதாகக் கூறியிருக்கிறார். தான் மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டன் எனவும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்ல பண உதவி செய்யுமாறு பல தனியார் நிறுவனங்களிடம் பணம் வசூலித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் வரை பலரையும் ஏமாற்றிய சம்பவம் தமிழத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com