வாணியம்பாடி : நள்ளிரவில் உணவு தேடி அலையும் ஒற்றை யானை - பொதுமக்கள் அதிர்ச்சி

வாணியம்பாடி : நள்ளிரவில் உணவு தேடி அலையும் ஒற்றை யானை - பொதுமக்கள் அதிர்ச்சி
வாணியம்பாடி : நள்ளிரவில் உணவு தேடி அலையும் ஒற்றை  யானை - பொதுமக்கள் அதிர்ச்சி

ஒற்றைகாட்டு யானை, விளைநிலங்களில் இருந்த மாமரம் மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

வாணியம்பாடி அருகே நள்ளிரவில்  உணவு தேடி ஒற்னை யானை ஒன்று கிராம பகுதிக்கு வந்து, அட்டகாசம் செய்து வருகிறது. இதனை விரட்ட, கிராம மக்கள் போராடி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்து உள்ள அருணாச்சல கொல்ல கொட்டாய், நாயக்கனூர், பழையவூர், காவலூர் ஆகிய மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று உணவு தேடி கிராம பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன,

இந்த நிலையில் மீண்டும் நள்ளிரவில் அருணாச்சலகொல்ல கொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த ஒற்றைகாட்டு யானை, விளைநிலங்களில் இருந்த மாமரம் மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

இதனால், ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்  ஒற்றை காட்டுயானையை வனப்பகுதியில் விரட்ட விடிய விடிய போராடி வருகின்றனர்.

இது குறித்து, ஒற்றை காட்டுயானையிக்கு காலில் காயம் ஏற்பட்டு, கிராமப் பகுதியில் வந்து பிளிரி வருவதாகவும்,  அதற்கு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்து மீண்டும் கிராம பகுதிகளுக்கு வராத வண்ணம், அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விடவேண்டும் என்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வனத்துறை அமைச்சருக்கு  கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com