தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை படுகொலை - போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை படுகொலை - போலீஸ் விசாரணை
தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை படுகொலை - போலீஸ் விசாரணை

தஞ்சாவூரில் பச்சிளம் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் பச்சிளம் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பள்ளிவாசல் தெரு உள்ளது. இந்த தெரு வழியாக சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் கீழே தண்ணீர் குழாய்க்கு அடியில் பச்சிளம் குழந்தை கழுத்து அறுபட்ட நிலையில் கட்டைப் பையில் இருந்துள்ளது. அப்போது பள்ளி வாசல் தெருவை சேர்ந்த குழந்தைகள் பாலத்தின் அருகே விளையாடி கொண்டிருந்த நிலையில் கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. உடனே சிறுவர்கள் அருகில் உள்ள கிராம மக்களிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com