இந்த திட்டம் எதிர்பார்த்தபடி நல்ல பலன் கொடுக்கவில்லை என்று புகார்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு செய்துள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-2018-ம் ஆண்டு போட்டி தேர்வுக்குத் தயாராகும் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்பேரில் ELCOT நிறுவனம் சார்பில் 60 ஆயிரம் மடிக்கணினிகள் கொள்முதல் அதிரடியாக செய்யப்பட்டன.
இதில் 8 ஆயிரத்து 79 மடிக்கணிகள் மட்டுமே போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மீதி இருந்த 55 ஆயிரம் மடிக்கணினிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மடிக்கணினிகளுக்கு அளிக்கப்பட்ட பேட்டரிகளின் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டது.
இதனால் 68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளது' என்று தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கடந்த 2016-ம் ஆண்டு பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‘எக்செல்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் எதிர்பார்த்தபடி, நல்ல பலன் கொடுக்கவில்லை என்றும், மிகக் குறைந்த பலனே கொடுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் தோல்வி அடைந்ததுவிட்டதாக தணிக்கைதுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.