தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள், யானை, குரங்கு, மான், மிளா போன்ற எண்ணற்ற விலங்குகள் வாழ்கின்றன. குறிப்பாக கடையம் வனச்சரகத்தில் மான்கள் அதிகம். மான்களை வேட்டையாடும் கும்பலும் அதிகம். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 10 மான்கள் வேட்டையாடப்பட்டு இருக்கின்றன. பொதுவாக மான்கள் இரவு நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காகக் காட்டுப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம். இதைத் தெரிந்து கொண்ட வேட்டைக்காரர்கள் நீர்நிலைகள் பக்கம் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருப்பார்கள்.