அமித்ஷாவின் நிகழ்ச்சி ரத்தானதால் அவருக்காக செய்யப்பட்டிருந்த மாலையில் இருந்து ஆப்பிளை மக்கள் பறித்துச்செல்வது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமித்ஷாவின் நிகழ்ச்சி ரத்தானதால் அவருக்காக செய்யப்பட்டிருந்த மாலையிலிருந்து ஆப்பிளை மக்கள் பறித்துச் செல்வது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் பிரசார பீரங்கியான அமித்ஷா பெங்களூருவின் தேவனஹள்ளி பகுதியில் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அமித் ஷா வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக கர்நாடகாவுக்குச் சென்று பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவனஹள்ளியில் சாலைப் பேரணியில் பங்கேற்பதாக இருந்தது.
மாநிலத்தில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக கர்நாடகா வருவதாக பா.ஜ.க-வினர் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று காலை ஏற்பட்ட மோசமான வானிலையால் அந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. அதனால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின் பொறுப்பில் இருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, 'யாரும் வருத்தப்பட வேண்டாம். நிச்சயம் இன்னொரு தேதியில் அமித்ஷா இங்கே வருவார்' என்று அறிவித்திருக்கிறார்.அவரது நிகழ்ச்சி அட்டவணையின்படி, 18 ஆம் நூற்றாண்டின் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறப்பிடமான தேவனஹள்ளியின் தாலுகா தலைமையக நகரமான பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் பிற்பகலில் அமித்ஷா ரோட் ஷோ நடத்துவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவரை வரவேற்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, பிரமாண்ட ஆப்பிள் மாலை தயார் செய்யப்பட்டிருந்தது. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த தொண்டர்கள் ஆப்பிள் பழங்களை போட்டிப் போட்டுக் கொண்டு பறித்துச் சென்றனர்.