ரம்ஜான் கொண்டாட்டம்: ஆம்பூர், வாணியம்பாடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து தொழுகை

ரம்ஜான் கொண்டாட்டம்: ஆம்பூர், வாணியம்பாடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து தொழுகை.
ரம்ஜான் கொண்டாட்டம்: ஆம்பூர், வாணியம்பாடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து தொழுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

கடந்த மார்ச் 24ல் துவங்கிய நோன்பு காலம் முடிந்த நிலையில், நேற்று மாலை பிறை தென்பட்டதால், இன்று(ஏப்ரல் 22) நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றர்.

இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதை இஸ்லாமும் அறிவுறுத்துகிறது. ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் ரம்ஜான் தினத்தை விமர்சையாக கொண்டாடுகின்றனர். 

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசலில், ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தி ‘ஈத் முபாரக்’ எனக் கூறி ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

மேலும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் இஸ்லாமியர்கள் நடத்திய ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார். தொடர்ந்து தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களை ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களையும் பகிர்ந்துக் கொண்டார். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com