தலைமைக் காவலர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவல்துறை மீதான மானியக்கோரிக்கையை விமர்சித்து சமூக வளைத்தளத்தில் பதிவிட்ட சென்னை தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் காவலர் நலன் சார்ந்த திட்டங்கள், காலி பணியிடங்களை நிரப்புவது, தமிழகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் ஆகியவை குறித்துப் பேசினார்.
இதனை விமர்சிக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பாலமுருகன் என்பவர் நேற்று மாலை வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜூவால், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து மற்றும் வீடியோவை பரப்பியதற்காக, தேனாம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.