கள்ளக்குறிச்சி: பெண் உள்பட 3 பேருக்கு நேர்ந்த கொடூரம் - போலீஸ் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி: பெண் உள்பட 3 பேருக்கு நேர்ந்த கொடூரம் - போலீஸ் தீவிர விசாரணை
கள்ளக்குறிச்சி: பெண் உள்பட 3 பேருக்கு நேர்ந்த கொடூரம் - போலீஸ் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன், 8 மாத கைக்குழந்தை ஆகிய மூவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35). இவரது கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் வளர்மதி காய்கறி வியாபாரம் ஆட்டோவில் செய்து வருவதாக கூறப்படுகிறது. ‌இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே யாரும் வரவில்லை எனவும் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின்பேரில் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வளர்மதி வீட்டிற்கு வந்துள்ளனர். உள்ளே சென்று பார்க்கையில் வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர்‌ கழுத்தறுக்கப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். 

தொடர்ந்து மூவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆய்வு செய்தார். சொத்துக்காக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வளர்மதி மற்றும் 11 வயது சிறுவன் தமிழரசன் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகிய மூவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக அவரது வீட்டில் மீட்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com