சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ளது குட்டி கேரளா என்றழைக்கப்டும் பூலாம்பட்டி. அந்தக் கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது நெரிஞ்சிப்பேட்டை கதவணை. ஊர் மக்களுக்குப் பயன்படுத்துவதற்காக காவிரி நீரைத் தடுத்து இந்த கதவனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கமான ஒன்று. நேற்று மாலை பூலம்பாட்டி பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற மீனவர் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். டெட்டனேட்டர் வெடியை வெடிக்க வைத்து மீன் பிடித்துள்ளார். அப்போது அங்குக் குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் என்ற இளைஞர் உடல் சிதறி பலியாகி உள்ளார்.