மாணவியின் திறமையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக, அமெரிக்கா விண்வெளி மையத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
கரூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, செம்பகணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஷோபனா. இவர், வானவில் அறிவியல் மையம் சார்பில் நடத்தப்பட்ட புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியில் கலந்துகொண்டு ’காற்றின் அழுத்தம் மற்றும் நீர் அலாரம்’ என்ற தலைப்பில் புதிய கண்டுபிடிப்பினைக் காட்சிப்படுத்தி முதல் பரிசை பெற்றார். மாணவியின் திறமையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா விண்வெளி மையத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறும்போது ‘நான் ஒன்றிய அளவில் தேர்வாகி, மாவட்ட அளவில் தேர்வாகி, மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளேன். அதுமட்டுமின்றி சென்னை, ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்வதற்கு தேர்வாகி அழைத்து செல்லப்பட்டு ராக்கெட் ஏவப்படுவதை பார்த்தேன். அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செல்வதற்கு தேர்வாகி இருக்கிறேன். நான் அங்கு செல்ல இருப்பது எனக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது’ என தெரிவித்தார்.