'ஹோட்டல் என்னுடையதுதான்.. ஆனால்?' - பாலியல் தொழில் சர்ச்சைக்கு கரூர் முன்னாள் எம்.எல்.ஏ-வின் பதில்

'ஹோட்டல் என்னுடையதுதான்.. ஆனால்?' - பாலியல் தொழில் சர்ச்சைக்கு கரூர் முன்னாள் எம்.எல்.ஏ-வின் பதில்
'ஹோட்டல் என்னுடையதுதான்.. ஆனால்?' - பாலியல் தொழில் சர்ச்சைக்கு கரூர் முன்னாள் எம்.எல்.ஏ-வின் பதில்

முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

கரூரில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வுக்குச் சொந்தமான ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு சாலையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, கரூர் நகர போலீசார், அந்த ஹோட்டலை சோதனை செய்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலுக்குத் தரகராக இருந்த ஒருவரும், மற்றொரு புரோக்கரும் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் ஈடுபட்டிருந்த மற்றொருவர் தப்பிவிட்டார்.

கரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல்லா, வழக்குப் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘கரூர், ஆத்தூரைச் சேர்ந்த குமார் செல்போன் கடை வைத்திருக்கிறார். இவர் திருமணமானவர். இவர் வேலை நிமித்தமாக கோவை ரோட்டில் நின்றுகொண்டிருந்த போது அருகில் வந்த ஒருவர், ’நல்லாயிருக்கீங்களா’என்று கேட்டுவிட்டு, ’ஈரோடு ரோட்டிலுள்ள கே.ஆர்.வி. ஹோட்டலில் அறை எண் 100ல் பெண்கள் இருக்கிறார்கள். ரேட் ரொம்ப குறைவுதான். வந்தால் ஜாலியாக இருக்கலாம்’என்று அழைத்துள்ளார்.

"என்னிடம் பணம் இல்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன். பிறகு இதுபற்றி விசாரித்தேன். அந்த ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பது உண்மைதான் என்று தெரிந்து புகார் கொடுத்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கரூர் போலீசார் அந்த ஹோட்டலை சோதனை செய்தபோது அறை எண் 100ல் இருந்த ஆப்பிள் ஸ்பா என்கிற அறையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை கைது செய்தனர். பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கரூர் புலியூரை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் ராஜீவ் ஆகியோரை கைது செய்தனர்.

இதில், வேலுச்சாமி என்பவரின் மகன் அரவிந்தும் புரோக்கராக செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.

இதுதொடர்பாக, அ.தி.மு.கவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரும், முன்னாள் எம். எல்.ஏ-வுமான கு.வடிவேலிடம் பேசினோம், ''என் ஹோட்டலில் பாலியல் தொழில் நடக்கவில்லை. ’என்றார். 'முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் கே.ஆர்.வி ஹோட்டல் உங்களுடையதுதானே?’ என்று கேட்டபோது, ’ஹோட்டல் என்னுடையதுதான். ஆனால், அங்குப் பாலியல் தொழில் நடக்கவில்லை’’என்று கூறியவரிடம், ''பெண்கள் மற்றும் புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளார்களே?'' என்று கேட்டபோது 'அதெல்லாம் பொய்’என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

-அரவிந்த்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com